Friday, April 29, 2011

`லாபியிங்’ எப்படிப் பிறந்தது? « உங்களுக்காக

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து அரசியல் ஆதாயம் பெற பாடுபடுவது `லாபி' பண்ணுவது அல்லது `லாபியிங்' (Lobbying) எனப்படுகிறது. இச்சொல், பிரிட்டீஷ் பாராளுமன்றம் தொடங்கிய காலத்திலேயே தோன்றியுள்ளது. அங்கு, மேல் சபைக்கும், கீழ்சபைக்கும் இடையே ஒரு நீளமான வராந்தா இருக்கும்.

பொதுமக்கள் அந்த வராந்தாவுக்கு வர அனுமதி உண்டு. வராந்தாவின் ஆங்கிலச் சொல், `லாபி'. அங்கு, தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்காக வாக்காளர்கள் காத்திருப்பார்கள். அப்போது நடக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தங்களுக்கு லாபகரமாக வாக்களிக்கும்படி பிரதிநிதிகளை வற்புறுத்துவார்கள். இந்தப் பழக்கம் `லாபி'யில் நடைபெற்றதால் `லாபியிங்' என்று பெயர் பெற்றது. அப்படியே அரசியல் இடைத்தரகு வேலைகளுக்கும் பொதுவான சொல்லாகிவிட்டது.

No comments:

Post a Comment